இஸ்லாமும் பாடல்களும்

மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்குசில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில்   பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

1.        ’சிர்க்”கில்லாத பாடலாக இருக்க வேண்டும்
2.       தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும்.
3.   இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும்.

சிர்க்கில்லாத பாடலென்பதின் கருத்து, நாம் படிக்கும் பாடல்களோ அல்லது நாம் கேட்கும் பாடல்களோ அல்லாஹ்விற்குரிய தன்மைகளை பிறருக்கு கொடுக்கக்கூடிய கருத்துக்களை பொருந்தியதாகவோ அல்லது அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய வணக்கங்களை அல்லாஹ்வின் படைப்புகளுக்கு கொடுக்கத் தூண்டும்படியான பாடல்களாகவோ இருக்கக்கூடாது.
தவறான கருத்துள்ள பாடலென்பது, தவறான கலாச்சாரத்தையும் தவறான பழக்க வழக்கங்களையும் கூறக்கூடிய, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இரட்டை கருத்துள்ள பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய   வார்த்தைகளை கூறக்கூடியவை. 
       இத்துடன் பாட்டில் இசை கலந்திருக்கவும் கூடாது. இவை அனைத்தையும்      இஸ்லாம் தடுக்கின்றது. இவைகள் அல்லாத பாடல்களை கேட்பதில் தவறில்லை.

இன்று நமது நாடுகளில் இஸ்லாமிய பாடல்கள் என்கிற பேரில் ஷிர்க் மற்றும் இசை கலந்த பாடல்கள் நமது வீடுகளில் வலம் வந்து கொண்டிருப்பது கவலைக்குரியதாகும். குறிப்பாக, அதிகாலையில் விழித்தெழுந்ததும் முதலில் கேட்பது, இஸ்லாமியக் கீதம்(?!).
இவைகள் இஸ்லாமியக் கீதமா? இஸ்லாத்திற்கு முறணான கீதமா? இஸ்லாத்திற்கு முறணான பல கருத்துக்களைக் கூறக்கூடிய, இந்த பாடல்களுக்கு  இஸ்லாமியக் கீதம் என்கிற முத்திரையையும் மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்.
இது போன்று மவ்லிது என்கிற பேரில் தெளிவான ஷிர்க் கியத்தான பாடல்களையும் நமது வீடுகளில் படிக்க வைப்பதற்கு, கூலிக்கு கூட்டி வந்து, நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பெரும் ஷிர்க் கையும் நமது வீடுகளில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றோம்இதைப் பற்றிய தெளிவை மக்களுக்கு கூற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 
கவிஞர்கள் இயற்றும் பாடல்கள் பற்றி இஸ்லாம் கூறுவதை காண்போம்
அல்லாஹ் கவிஞர்கள் பற்றி குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.
இன்னும் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?   இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள். 26:224,227
அதாவது, உண்மைக்கு மாறாக பேசுபவர்கள், இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி, சொல்ல விரும்பும் செய்தியை எதைக் கூறியாவது நிலை நிறுத்தப்பார்ப்பவர்கள். கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு அழகு பொய்என்று கூறுமளவு, கவிஞர்கள் பொய் கூறுவார்கள். இதுதான் இன்றைய உலக நடப்பும் கூட. ஒருவரை உயர்த்துவதற்காக  அவரை வானளாவ அளவுக்கு உயர்த்துவார்கள், ஒருவரை இகழ்வதற்காக அவரை தரைமட்டத்திற்கே இறக்கி கொண்டு வந்து விடுவார்கள். இதுதான் கவிஞர்களின் நிலையாகும்.
இவ்வாறு நபி(ஸல்) அவர்களுக்கு, நாம் கவிதையை கற்றுக் கொடுக்கவும் இல்லை, அது அவர்களுக்கு தேவையுமில்லை என்று திருமறை கூறுகின்றது.  இதுபற்றி அல்லாஹ்  திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல் இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. 36:69
மேற்கூறப்பட்ட திருவசனங்களின் மூலம் பாட்டுப் பாடுவதும் அதை கற்றுக் கொள்வதும் அவசியமில்லாத ஒன்றாகும் என்றும், பாடகர்கள் பொய் சொல்லியே தங்களின் பாடல்களையும் கவிதைகளையும் மெருகூட்டுவார்கள் என்று கூறி அப்படிப்பட்ட பாடகர்ளை எச்சரிக்கின்றது இஸ்லாம்.
அதே நேரத்தில், நபி(ஸல்) அவர்களின் வீட்டிலே சிறுமிகள்  பெருநாள் தினத்தில் பாட்டுக்களை படித்துக் கொண்டிருக்கும் போது, அபூபக்ர்(ரலி) அவர்கள் அதை தடுத்த போது, நபி(ஸல்) அவர்கள், இது அவர்களின் பெருநாளுடைய தினம், பாடவிடுங்கள் என அனுமதி வழங்கினார்கள் என்று ஹதீது புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் பதிவாகியிருக்கின்றது. மற்றும் நபி(ஸல்) அவர்களை குறைஷி கவிஞர் கவிதை மூலம் நபி(ஸல்) அவர்களை வசைபாடிய போது, ஹஸ்ஸான் இப்னு தாபிது(ரலி) அவர்களுக்கு கவிதை மூலம் விடை சொல்லும்படி கூறிய ஹதீது புகாரியில் பதிவாகியுள்ளது. அதே போன்று, அகழ் போரில் நபித்தோழர்கள், பசியோடு வயிற்றிலே கற்களை கட்டியவாறு சில கவிதைகளை பாடினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அகழ் தோண்டப்படும் இடத்திற்கு சென்றபோது, முஹாஜிரீன்களும் அன்சாரிகளும் குளிரான காலை நேரத்தில் அகழ் தோண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அவர்களின் கஷ்டத்தையும் பசியையும் பார்த்த நபி(ஸல்) அவர்கள் (பின்வரும் கவிதைகளை பாடினார்கள்
)
இறைவா! உண்மையான வாழ்க்கையென்பது, மறுமை வாழ்க்கையாகும் அன்சாரிகளுக்கும் முஹாஜிரீன்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!
நபி(ஸல்) அவர்களுக்கு விடை கொடுக்கும் முகமாக நபித்தோழர்கள் பின்வரும் கவிதைகளை பாடினார்கள்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் உடன்படிக்கை செய்திருக்கின்றோம்
உயிர்வாழும் வரை ஜிஹாத் செய்வதற்கு. (புகாரி)
(பின்வரும் கவிதைகளை) கூறிய நிலையில், அகழ்போர்களத்தில் நபி(ஸல்) அவர்கள் மண்ணை சுமந்து கொண்டு செல்வதை நான் பார்த்தேன், மண், அவர்களின் வயிற்றின் வெண்மை நிறத்தை மூடியிருந்தது,
நீ இல்லையென்றால், நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். இன்னும் தர்மம் செய்திருக்கவும் மாட்டோம் தொழுதிருக்கவும் மாட்டோம். ஆகவே எங்கள் மீது அமைதியை இறக்கி வைப்பாயாக!
நாங்கள் எதிரிகளை சந்தித்தால் (எங்களின்) கால் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! …. என சில வரிகளை நபி(ஸல்) பாடினார்கள்.
அறிவிப்பவர் : பராஉ (ரலி), ஆதாரம் : புகாரி
மேல் கூறப்பட்ட ஹதீதுகளின் மூலம், நல்ல கருத்துக்களுள்ள பாடல்களை படிப்பதும் கேட்பதும் ஆகுமென்றும், தவறான கருத்துள்ள பாடல்லகளை படிப்பதும் கேட்பதும்தான் தவறு என்பதும் தெளிவாகின்றது.





Comments

  1. Really All are most valuable information... Jazakallahu khair and may Allah give you more knowledge to do Da'wa

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா?

சாப்பாட்டின் ஒழுங்கு முறைகள்