மூன்று விஷயங்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சமுதாய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நம்பிக்கை கொண்டோரே!
அல்லாஹ்வுககு அஞ்சுங்கள்!
நேர்மையான சொல்லையே கூறுங்கள்!’ (அல்அஹ்ஸாப் : 70)
நபி(ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் வெற்றி தரக்கூடியவை,

மூன்று விஷயங்கள் அழிவை தரக்கூடியவை என கூறினார்கள்.  

வெற்றி தரக்கூடியவை
தனிமையிலும், சபையிலும் அல்லாஹ்விற்கு அஞ்சுவது,
விருப்பு வெறுப்பு இரு நிலைகளிலும் உண்மையை பேசுவது,
வறுமையிலும், செழிப்பிலும் நடுநிலையை மேற்கொள்வது. 
அழிவை தரக்கூடியவை - 
மனோ இச்சையை பின்பற்றுவது, அதற்கு அடிமையாவது,
தன்னை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு பேராசை கொள்வது,
இருமாப்பு கொள்வது,
இந்த மூன்று நோய்களில் இறுதியானது ஆபத்திற்குரியது.
அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி), நூல்: பைஹகி, மிஷ்காத்)


(நபியே!) உமக்கு ஏவப்பட்டதை நோக்கி அழைப்பீராக!
உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக!
அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்!
அல்லாஹ் அருளிய வேதத்தை நம்பினேன்.
உங்களுக்கிடையே நீதியாக நடக்க கட்டளையிடப்பட்டுள்ளேன்.
அல்லாஹ்வே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான்.
எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு.
எங்களுக்கும், உங்களுக்குமிடையே எந்தத் தர்க்கமும் (இனி) இல்லை.
அல்லாஹ் (மறுமையில்) நம்மை ஒன்று திரட்டுவான்.
அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.
என்று கூறுவீராக!. (அஷ்ஷுஅரா:15)

சமுதாய சகோதரர்களே சிந்தியுங்கள்!
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே,
(மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி,
 தங்களையே மறந்து விடுகிறீர்களா?
நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? அல்பகரா:44
அல்லாஹ்வின் மார்க்கத்தை தூய முறையில்
நாம் ஒவ்வொருவரும் நமது ஊர்களில் உள்ள
உற்றார், உறவினர்கள், ஊர் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
சமுதாயத்தில் ஒற்றுமையுடனும் அதேசமயம்
மார்க்க விஷயங்களில் எந்தவித சமரசத்திற்கும் இடம் தராமலும் செயல்படுவோம்.

….நம்மையிலும் இறையச்சத்திலும்
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்!
பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (அல்மாயிதா: 2)

Comments

Popular posts from this blog

கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா?

இஸ்லாமும் பாடல்களும்

சாப்பாட்டின் ஒழுங்கு முறைகள்