Posts

Showing posts from June, 2013

இஸ்லாமியத் திருமணம்

Image
உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், இவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்: ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைத் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தத்தமது உரிமைகளைக் கேட்டுக் கொள்கிறீர்கள்) மேலும் (உங்கள்) இரத்த பந்தங்களையும் ஆதரியுங்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிக்கிறான். (அல்குர்ஆன் 4:1) (இது எல்லாத் திருமண (பிரசங்கம்) குத்பாவிலும் ஒதுப்படும் இறைவசனமாகும்) உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையற்ற நற்குணமுள்ள) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32) ரசூல்   அவர்கள் அறிவுறுத்தினார்கள்: “திருமணம்” எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்

நற்செயல்களால் நம்மை அலங்கரிப்போம்!

நீங்கள் உடலால் பேரழகனா, இல்லை பேரழகியா என்று அல்லாஹ் பார்க்க மாட்டான். மாறாக  நீங்கள் உள்ளத்தால் அழகானவரா என்பதை மட்டுமே அல்லாஹ் பார்ப்பான். எனவே, நீங்கள் உங்கள் உள்ளங்களை அழகு படுத்திக்கொள்ளுங்கள். சமூகத்தில் நீங்கள் எந்த தரம் என்பதை அல்லாஹ் பார்க்கமாட்டான்.  நீங்கள் சமூகத்தில் எந்த தரத்தில் நடந்து கொண்டீர்கள் என்பதையே அல்லாஹ் பார்ப்பான். எனவே நற்பண்புகளால் உங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு எத்தனை வீடுகள், பங்களாக்கள் இருந்தன என்று அல்லாஹ் பார்க்க மாட்டான். அவைகளில் எத்தனை அனாதைகளுக்கு அடைக்கலம் தந்தீர்கள் என்றே பார்ப்பான்.  எனவே, உங்கள் இல்லங்களில் ஆதரவற்ற அனாதைகளுக்கு அடைக்கலம் கொடுங்கள். நீங்கள் என்னென்ன உணவு உண்டீர்கள் என்பதை அல்லாஹ் பட்டியல் கேட்க மாட்டான்.  பசியோடு வந்த எத்தனை ஏழைகளின் பசியை போக்கினீர்கள் என்றுதான் அல்லாஹ் கேட்பான். எனவே, பசித்தோருக்கு உணவளியுங்கள். உங்களது அலமாரி மற்றும் பீரோக்களில் நீங்கள் எத்தனை டிசைன்களில் எத்தனை ஆடைகள் அடுக்கி வைத்திருக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் கேட்கமாட்டான்.  ஆடையற்ற ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் அவற்றிலிருந்து தந்து

பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டு துஆ

Image
நபி  அவர்களும் அவர்களின் கலீபாக்களும், மற்றும் சஹாபாக்களும் பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டாக துஆ ஓதியதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. அதாவது  இ மாம் துஆ ஓத மற்றவர் “ஆமீன் ஆமீன்” என்று கூறும் நிலை ( இ ன்று நமது பகுதிகளில் நடைமுறையில்  இ ருப்பது போல்) அவர்கள் காலத்தில் கிடையாது.     நம்மைவிட துஆ கேட்கும் வகையில் பன்மடங்கு ஆர்வம் கொண்டுள்ள நபி  அவர்களும், அவர்களின் உத்தம ஸஹாபாக்களும் ஒரு நேரத் தொழுகையிலும் கூட  இ மாம் துஆ ஓத, மற்றவர் ஆமீன் கூறும் அமைப்பில் இ ருந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் ஹதீஸ்களில் கிடையாது. மாறாக நபி  அவர்களும், சஹாபாக்களும் ஜமாஅத் முடிந்தவுடன் தனித்தனியே துஆ ஓதியுள்ளார்கள் என்பதையே ஹதீஸ்களின் வாயிலாக அறிய முடிகிறது.     நபி  அவர்கள் தொழுகையிலிருந்து திரும்பிவிட்டால் “மும்முறை”  أ أَسْتَغْفِر ُ اللهَ   அஸ்தஃபிருல்லாஹ்” என்று (கூறி) பாவமன்னிப்புத் தேடுவார்கள். (பின்னர்) اللَّهُم َّ أَنْتَ السَّلأمُ وَ مِنْكَ السَّلأمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَ الإِكْرَم    ”அல்லாஹும்ம அந்த்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல் இ க்ராம்” என்று ஓதுவார்கள். என்று ஸவ்பான்