நபியவர்களே அழகிய முன்மாதிரி

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து,
அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக
அல்லாஹ்வின் தூதரிடம்
ஓர் அழகிய முன் மாதிரி உங்களுக்கு இருக்கிறது’ (33:21).
நபியவர்களே எமது முன்மாதிரியாவார்கள்.
அவர்களின் அழகிய முன்மாதிரியை நாம் பத்ர்போரின் போது
பல அடிப்படையிலும் காணமுடிகின்றது.
பத்ர்போரின் போது மூவருக்கு ஒரு ஒட்டகம்
என்ற அடிப்படையில் பங்கு செய்யப் பட்டது.
இதன்படி அபூலுபாபா, அலி, நபி(ஸல்) ஆகிய மூவருக்கும்
ஒரு ஒட்டகம் கொடுக்கப்பட்டது.
ஒருவர் ஏறிவர, இருவர் நடந்து வர வேண்டும்
என்று சுழற்சி முறையில் நபி(ஸல்) அவர்கள் நடந்துவர நேரிட்டபோது,
இவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே நாம் நடந்தே வருகின்றோம்.
நீங்கள் ஒட்டகத்தில் ஏறி வாருங்கள்என்று கூறினர்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள்,
நீங்கள் இருவரும் என்னை விடப் பலமிக்கவர்களுமல்லர்;
உங்களைவிட நன்மையைத் தேடிக்கொள்ளும் விடயத்தில் நான் தேவையற்றவனுமல்லஎனக் கூறினார்கள்’ (அஹ்மத்).
குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு கட்டளையிடும் தளபதியாக அவர் இருந்ததில்லை. தோழர்களுடன் தோழனாக அவர்களைப் போன்றே சிரமங்களைத் தாங்கிக்கொண்டு களத்திலிருந்த தலைவர் அவர்கள்.
இவ்வாறு, ‘பத்ர்களத்தில் நபி(ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளுக்கான பல்வேறு உதாரணங்களையும் காணலாம். எனவே, முஹம்மத்(ஸல்) அவர்களே எமது முன்மாதிரியாவார்கள். அவரின் முன்மாதிரியை முழு வாழ்விலும் எடுத்து அவரைப் பின்பற்றுவது எமது தலையாய கடமையாகும்.
இவ்வாறு நோக்கும்போது, பத்ர் யுத்தமும் அதில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றியும் எமக்குப் பல்வேறு படிப்பினைகளைத் தருகின்றன. இவ்வாறே, இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் படிபடிப்பினைகளை நிறைந்தே உள்ளன. அவற்றையெல்லாம் சிந்தித்து, எமது நிகழ்காலத்தையும் எதிர் காலத்தையும் எழுச்சி மிக்கதாக மாற்றிக் கொள்ள முயல்வோமாக

Comments

Popular posts from this blog

கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா?

இஸ்லாமும் பாடல்களும்

சாப்பாட்டின் ஒழுங்கு முறைகள்