திருமணம்

திருமணத்தை ஆகுமாக்கிய மார்க்கம் இஸ்லாம்:-
இறைவனால் தன்னை வணங்குவதற்காகவே படைக்கப்பட்ட இனங்களுல் மனித இனம் சிரேஷ்டமானது. இவ்வினத்தைப்படைத்த இறைவன் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையான எல்லா வஸ்துக்களையும் வசப்படுத்தி கொடுத்து மனிதனது விருப்பு வெறுப்புக்களையும் தட்டிக்கழிக்காது எண்ணிளடங்கா அருட்கொடைகளையும் வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். மனிதனை இருஇனங்களாக ஒரு ஆண் மற்றும் பெண்ணிலிருந்து படைத்த அந்த இறைவன் அந்த இரு இனமும் சங்கமிக்கும் வரப்பிரசாதத்தையும் ஆகுமாக்கியுள்ளான்.
உங்களில் வாழ்கை துணையில்லாதவருக்கும், உங்களுடைய ஆண் அடிமைகளுக்கும், இன்னும் நல்லொழுக்கமுல்ல அடிமைப் பெண்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன்னுடைய பேரருளைக் கொண்டு அவர்களை செல்வந்தர்களாக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் மிக்க விசாலமானவன் நன்கறிந்தவவன்’ (சூரதுன் நூர் 32)
என அல்லாஹ் தன் திருமறையயில் திருமணத்தை ஆகமாக்குவதை காணலாம். அவ்வாரே அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களும் திருமணம் முடித்து குடும்பம் நடத்தியவர்களாகவே அதிகமானகவர்களை நம்மால் கண்டுக் கொள்ள முடிகிறது.
அவர்கள் கூட இந்த வழிமுறையை குறிப்பாக இறுதித் தூதர் முஹம்மது (ஸல்)  எடுத்துக்கொண்டதோடு முழு இளைஞர் சமுதாயத்தையும் பார்த்து
வாலிபர்களே உங்களில் யார் (உடல் மற்றும் ஏனைய) சக்தி பெறுவாரோ அவர் திருமண ம் முடித்துக் கொள்ளட்டும். நிச்சயமாக அது  கற்பைக் காத்துக் கொள்வதற்கும் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுவதற்கும் போதுமானது…..
’ (புகாரி 5065, முஸ்லிம் 1400)
என தெளிவாகவே திருமணம் முடித்துக் கொள்ளும் படியும் அதனால் ஏற்படக்கூடிய பிரதிபலன்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள்.
இவ்வடிப்படை உரிமையை சில முஸ்லிம்களே புரிந்து கொள்ளாது இருப்பதை கண்டுகொள்லாமல் இருந்துவிட முடியாது. எனவே வாழ்க்கையில்சாதித்து விட்டுத்தான் திருமணம்என சாட்டுப்போக்கு சொல்லுபவர்கள் திருமணம் முடித்து வாழ்ந்து காட்டுவதும் ஒரு சாதனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

திருமணத்தின் மூலம் ஒரு பெண்ணை அடைந்துக் கொள்ள முயலும் ஒரு ஆணுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதன் சட்டங்களை நோக்குவோம்.


Comments

Popular posts from this blog

கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா?

இஸ்லாமும் பாடல்களும்

சாப்பாட்டின் ஒழுங்கு முறைகள்