நபியவர்கள் செய்த ஹஜ்
அதனை நீங்கள் அடைய வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகளை, பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும். முதலாவது இக்லாஸ் ( அல்லாஹ்வுக்காக ஹஜ் ஜை நிறைவேற்றுவது) இரண்டாவது நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ் ஜை நிறைவேற்றுவது. ஹஜ் ஜைப்பற்றிய சரியான தெளிவு இல்லாமல் இன்று பல ஹாஜிகள், ஹஜ் கிரியைகளை தவறான முறையில் செய்கின்றார்கள். நபியவர்கள் செய்த ஹஜ் ஜை சுருக்கமாகச் சொல்லி விளங்கவைப்பதினால் இத்தவறுகளை நீக்கலாம் என்ற நன்னோக்கோடு இச்சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. என்னிடமிருந்து உங்களின் ஹஜ் கடமைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே இதைப்படித்து நபியவர்களின் ஹஜ் ஜைப் போன்றே நீங்களும் செய்யுங்கள். அல்லாஹ் நமது ஹஜ்ஜை ஏற்று “அன்று பிறந்த பாலகனை” போன்றும், ஹஜ்ஜின் கூலியாகிய சுவர்க்கத்தைப் பெற்றவர்களாகவும் ஆக்கியருள்வானாக . உம்ரா ச் செய்யும் முறை உம்ரா செய்வதற்கு முன் குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் இஹ்ராம் அணியும் எல்லைக்குள் வசிப்பவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து நிய்யத்து வைத்துக் கொள்ள வேண்டும். இஹ்ராம் உடை என்பது ஆண்களுக்கு இரண்ட